பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 சாய்ந்த மாருதி சதுர்முகன் படை எனும் தன்மை ஆய்ந்து, மற்று இதன் ஆணையை அவமதித்து அகறல் ஏய்ந்தது அன்று என எண்ணினன் கண் முகிழ்த்து இருந்தான். ஓய்ந்ததாம் இவன் வலி என அரக்கன் வந்துற்றான்'. (பாசப்படலம்-58) 4. கடமையுணர்வு 1. அனுமன் சீதையைக் காண முடியாமைக்கு மிகவும் வருந்தினான். தான் கடமை தவறிவிட்டதாக எண்ணித் தானும் இறக்க எண்ணினான். இராமனுக்கு அடிமை செய்வதாக நடித்து வாழ்வதா உண்மையான அடிமைப் பணியாகும்? என்று வருந்தினான். 'நடித்து வாழ்தகைமையதோ அடிமைதான்' (ஊர்தேடு படலம்-218) 'கண்ணியநாள் கழிந்துளவால்; கண்டிலமால் கனங்குழையை விண் அடைதும் என்றாரை ஆண்டு இருத்தி - விரைந்தயான்; எண்ணியது முடிக்க கில்லேன்; யான் . முடியாது இருப்பேனா? புண்ணியம் என்றொரு பொருள் என்னுழை நின்றும் போயதால் (226). 2. ஏற்றுக்கொண்டு வந்தபடி சீதையைத் தேடிக் கண்டுபிடித்து, இராமனிடம் சென்று கண்ட விவரமும், சீதையின் நிலைமையும் அறியச் செய்தல். 5. சொல் தவறாமை 1. சீதையைக் கண்டுபிடித்தே வருவேன் என்று அனைவரிடமும் சொன்ன சொல் தவறாமல் சீதையைக் கண்டுவருதல்.