பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 2. திரும்பி வரும்போது உன்னிடம் வருவேன் என மைந்நாக மலைக் குச் சொல்லிச் சென்ற சொல் தவறாமல் இலங்கையிலிருந்து திரும்பியபோது மைந்நாக மலையையும் கண்டு விவரம் கூறிச் சென்றான் அனுமன் : 'மைந்நாகம் என்ன நின்ற குன்றையும் மரபின் எய்தி கைந்நாகம் அனையோன் உற்றது உணர்த்தினன்? (திருவடி தொழுத படலம்-2) 6. கூரிய மதிநுட்பம் அனுமன் தன் கூரிய மதிநுட்பத்தால், குறிப்பாகப் பல செய்திகளை நுனித்துணர்ந்து தெரிந்து கொண்டான். 1. அனுமன் முதல் முதலாக வீடணனைக் கண்டதும், அவனது நல் உணர்வைத் தனது உணர்வினால் உணர்ந்து கொண்டான்; இவன் குற்றம் இல்லாதவன்-நல்ல பண்பினன் என்பதையும் குறிப்பால் தெரிந்து கொண்ாான். 'உற்று நின்று அவன் உணர்வைத் தன் உணர்வினால் உணர்ந்தான்;. குற்றம் இல்லதோர் குணத்தினன் இவன் எனக் கொண்டான்' (ஊர் தேடு படலம்-135) 2. அனுமன் இந்திரசித்தைக் கண்டதும், இவன் அரக் கனா? சிவன் மகனாகிய முருகனா? இராம இலக்குமணர் கள் இவனோடு பல நாள் போரிட நேரும்போல் நினைக்கச் செய்கிறது இவனது தோற்றம், சிவனைத் துணையாகக் கொண்ட இராவணன் இந்த மூன்று உலகங்களையும் வென்றது மிகவும் எளிய செயலே என்றெண்ணுகிறான்: 'வளையும் வாள் எயிற்று அரக்கனோ? கணிச்சியான் மகனோ? அளையில் வாளரி அனையவன் யாவனோ அறியேன். இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள் உளைய உள்ளபோர் இவனொடும் உளதென உணர்ந்தான்' (139)