பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கற்பனை நயச் சிறப்புகள் இலக்கியம் எனில்,கற்பனை அதில் கட்டாயம் இருக்கும்; கம்ப ராமாயணம் போன்ற வரலாற்று இலக்கியங்களில் கற்பனை இல்லை எனில், அவை இலக்கிய நூல்களாகக் கருதப்படாமல் வரலாற்று நூலாகவே கருதப்படும். கம்ப ராமாயணமோ கற்பனை கலந்த வரலாற்று இலக்கியமாகும். மற்றோர் உண்மையையும் இங்கே ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். ஏறத்தாழ இன்றைக்கு (1989) இரண்டா யிரம் ஆண்டுக்கு முற்பட்டனவாகக் கூறப்படும் கழக (சங்க) இலக்கியங்களில், கம்ப ராமாயணம் போன்ற் நூல்களில் உள்ள கற்பனைகள் போன்றவை இல்லை. கழக இலக்கியங் களில், அண்டப் புளுகுகள்-ஆகாயப் புளுகுகள் இன்றி, ஒரளவு இயற்கையோடு தோய்ந்த கற்பனையே இருக்கும். பசு பால் தரும்; பால் வெள்ளையாயிருக்கும்என்பதில் கற்பனை இல்லை. எவ்வளவு தண்ணிர் ஊற்றினும் பால் வெண்மையா யிருக்கும்; கறுப்பு மாட்டுப் பாலும் சிவப்பு மாட்டுப் பாலுங்கூட வெண்மையாகவே இருக்கும்- என்பது, ஒரளவு இயற்கையை ஒட்டிய கற்பனை எனலாம். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பாடியுள்ள, 'பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தர நீ என்ன பக்குவம் செய்தாய் அதனைப் பகருவையோ பசுவே" (மலரும் மாலையும்-பசு)