பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வேளை தேவனாக இருக்கலாம்-நல்ல உணர்வினன்! தூய்மையானவன்; குற்றம் இல்லாதவன்-என்று மதிப்பிட் டாள். இது அனுமனின் இயற்கைப் பண்பு என்பதை அவனது தோற்றமே உணர்த்திற்று: "என்றவன் இறைஞ்ச நோக்கி, இரக்கமும் - முனிவும்எய்தி, நின்றவன் நிருதன் அல்லன்; நெறிநின்று i . பொறிகள் ஐந்தும் வென்றவன்; அல்லனாகில் விண்ணவ னாகவேண்டும்; நன்றுணர்வு உரையன்; தூயன், நவை இலன்..." (உருக்காட்டுப் படலம்-26) 6. அசோக வனத்தில் வருந்திக் கொண்டிருந்த சீதைக்கு இனிய-நயமான உரை கூறி ஆறுதல் செய்த திறமையன் அனுமன் 7. இராவணனுக்குத் தக்க அறிவுரை கூறிய உயரிய பேதைமை உடையவன் அனுமன். 8. இலங்கையிலிருந்து மீண்டு, இராமனிடம் சென்று சீதை இலங்கையில் கற்பு நெறி வழுவாமல் இருக்கின்றாள் என்பதைக் குறிப்பால் உணர்த்திய வல்லவன் அனுமன். சுந்தர காண்டத்திலன்றி வேறு பகுதிகளிலிருந்தும் அனுமனின் பெருமையை அறிந்து கொள்ளலாம்.