பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 அமிழ்தத்தால் மன்மதன் தீட்டிய அழகோவியம் புகையுண்டதைப்போல் பொலிவற்றிருந்தாள். 2. சில நினைவுகள் துயரத்தால் பலவாறு நினைக்கலானாள் : நம்மை இராவணன் எடுத்து வந்த பிறகு, இலக்குவன் போய் இராமரைக் காணவில்லையா? இராவணன் தன்னை எடுத்து வந்தது இராமருக்குத் தெரியாதா? வழியில் நேரிட்ட சடாயுவும் மாண்டு போன தால் என்னைப் பற்றி யார் இராமனுக்குக் கூறக்கூடும். இராமர் யார் இட உணவு அருந்துவாறோ? என்னைத் தம்பி இலக்குமணன் சொன்னதைக் கேளாத கொடியவள் என்றெண்ணித் துறந்து விட்டாரோ? என்னைச் சூழ்ந்து அரக்கர்கள் நின்றிருப்பர் என் றெண்ணி இராமர் வரவில்லையோ? ஒருவேளை, தாயாரும் தம்பியரும் காட்டிற்கு வந்து அவரை அயோத்திக்கு அழைத்துக் கொண்டு போயிருப்பார் களோ? பதினான்கு ஆண்டுகள் கழியாமல் அவர் அயோத்திக் குத் திரும்ப மாட்டாரே! அரக்கரோடு அவர்க்குப் பெரிய போர் உள்ளது. அவரை இப்பிறப்பில் இனிக்காண முடியாதோ? என் பழைய ஊழ்வினை இவ்வாறு முடிந்ததோ? 3. பழைய நினைவுகள் சில கைகேயி, உன் தம்பிக்கே அரசு என்று சொன்னபோது மும்மடங்கு பொலிந்த இராமனது முகத்தை நினைத்துப் பார்த்தாள். பட்டம் பெறுக என்ற போதும், பட்டத்தைத் துற என்ற போதும், சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை.