பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15i எப்போதும் ஒரே மாதிரியாயிருப்பது போல, ஒத்த நிலையில் ஒரே மாதிரியாய் இருந்த அமைதியான-சாந்தமான இராமனது நிலையை எண்ணிப் பார்த்தாள். சிவனது வில்லை இராமன் முறித்த ஆற்றலை எண்ணி வியந்தாள். தந்தைக்கு இறுதிக் கடன் செய்தது-பரதன் தவக்கோலம் கொண்டது ஆகியவற்றை நினைத்தாள். இராமன், வேடன் குகனிடம், என் தம்பி நின் தம்பி; நீ என் தோழன்; இவள் (சீதை) உன் கொழுந்தி என்றெல் லாம் கூறிய அன்புரை அவள் உள்ளத்தை வாட்டியது. "ஆழநீர்க் கங்கை அம்பி கடாவிய ஏழை வேடனுக்கு, எம்பி நின்தம்பி, நீ தோழன், மங்கை கொழுந்தி எனச் சொன்ன வாழி நண்பினை உன்னி மயங்குவாள்.' (காட்சிப் படலம்-23) இராமன் பரசுராமனின் வில்லை முரித்ததையும், காகமாக வந்து தீச்செயல் புரிந்த சயந்தனது கண்ணைப் போக்கியதையும், வீராதன் என்னும் அரக்கனின் தீவினையைப் போக்கியதையும் சீதை எண்ணி ஏங்கினாள். அந்தணர்கட்கு இராமன் ஆனினம் (பசுக்கள்) பரி சளித்தபோது ஒர் அந்தணன் ஒர் ஆன் பெற்றது போதாமல் மேலும் பெற அவாக் கொண்டதைக் கண்டு இராமன் சிரித்ததை எண்ணிச் சீதை இப்போது அழுதாள்: 'பரித்த செல்வம் ஒழியப் படரும்நாள் அருத்தி வேதியற்கு ஆன் குலம் ஈந்து அவன் கருத்தின் ஆசைக் கரை இன்மை கண்டு இறை சிரித்த செய்கை நினைந்து அழும் செய்கையாள் '-26 இப்பாடலில் சிரித்த செய்கையும் அழுத செய்கையும் அடுத் தடுத்துக் கூறப்பட்டிருப்பது ஒரு வகை முரண் தொடை யாகும்.