பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 4. சீதையின் புலம்பல் அசோகவனத்தில் இருந்த போது பலவாறு புலம் பலானாள்: இராமர் வந்து எனது உயிரை மீட்டுத் தருவாரா? கல்லாத திங்களே (மதியே)! நிலவொளியே! இரவே! இருளே! என்னை மட்டும் வருத்துகிறீர்களே! இராமரையும் வருத்தமாட்டீர்களா? வாடைக்காற்றும் குளிருக்குப்பதில் நெருப்பை வீசுகிறதே! (உருக்காட்டுப் படலம்) ' கல்லா மதியே கதிர்வாள் நிலவே! செல்லா இரவே சிறுகா இருளே! எல்லாம் எனையே முனிவீர்; நினையா வில்லாளனை யாதும் விளித்தி லீரோ" (4) 'தழல் வீசி உலாவரு வாடை தழி இ அழல்வீர் எனதாவி அறிந்தி லீரோ!!-- (5) பிரிவுத்துயரால் சீதை வருந்துவதை இப்பாடல்கள் அறி விக்கின்றன. தன்னை வருத்துவதால் மதியைக் கல்லா மதி எனச் சீதை காய்கிறாள். இரவு செல்லாமல் அப்படியே நீண்டு கொண்டிருக்கிறதாம். இருளும் அப்படித்தானாம். குளிரால் நடுங்கச் செய்யக் கூடிய வாடைக் காற்று நெருப்பை வீசி உலா வருகிறதாம். இவை, காதலரைப் பிரிந்து வருந்துவோர் கூறும் மரபுக் கூற்றுகளாம். என் நாயகரே! காட்டுக்கு வராதே என்று அன்று கூறினிர்! ஏதோ வந்து விட்டேன். என்மேல் இரங்கி என்னை மீட்க இங்கே வாரீரோ? போகாமல் இன்னும் நாணம் இன்றி இருக்கிற என் உணர்வே! உயிரே! இருந்ததே இருந்து விட்டீர்! யான் எ ன் நாயகரைக் காணும் வரையும் போக வேண்டா! யான் பழியோடு போகக் கூடாதல்லவா?