பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 என்னும் பாட்ல் இயற்கையை ஒட்டிய கற்பனையாகும். அடுத்து, கழக இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு என்னும் நூலில் உள்ள ஒரு பாடலில் வற்றிய குளம் ஒன்று இயற்கைக் கற்பனையால் சொல்லோவியப் படுத்திக் காட்டப் பட்டுள்ளது: "கடுமையாகக் கோடைக்காலம் நீண்டு கொண்டிருக் கிறது. நாட்டில் கடுமையான கருப்பு (பஞ்சம்) வருத்து கிறது. வயலில் உழவேண்டிய ஏர் கலப்பை தூங்கிக் கொண்டிருக்கிறது. பசுமை என்பதே அற்று விட்டது. ஒரு பெரிய குளம் வெப்பத்தால் சுடுகிறது. (உள்ளே ஈர நெல்லைக் கொட்டிக் காய வைக்கலாம் போலும்) அக்குளத்திற்குள்ளே வெற்றுத் தரையைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. "அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவை போல்' என்பதற்கு ஏற்ப ஒரு பறவையும் அங்கு இல்லை. குளத்தின் கரையோ ஒரு குன்றைப் போல் உயர்ந்துள்ளது' -என்று குளம் ஓவியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஓவியக்கற்பனை எதற்காகக் கூறப்பட்டுள்ளது? தலைவிக்குத் திருமணம் கூடிவிட்டது என்று தோழி அவளிடம் கூறுகிறாள். இது தாய் வாயிலாகத் தோழி கேட்டறிந்த செய்தி, இத்தகைய குளம்.நிறையப் பெரு மழை பெய்த மறுநாள் காலை மக்கள் பலரும் அடையக்கூடிய மகிழ்ச்சி எவ்வளவோ-அவ்வளவு மகிழ்ச்சியைத் திருமண உறுதி கேள்விப்பட்டு யான் பெற்றேன்- என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள். - இங்கே, மழையின் மிகுதியைக் கற்பனை செய்து காட்டுவதற்காகக் கோடையும் குளத்தின் நிலைமையும் கற்பனைசெய்து காட்டப்பட்டுள்ளது. இது பற்றிய அகநானூற்றுப் பாடலிலிருந்து சில அடிகள் வருமாறு: