பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 'சொல் பிரியாப் பழி சுமந்து தூங்குவேன் நற்பிறப்பு உடைமையும் நாணும் நன்றரோ கற்புடை மடந்தையர் கதையில்தான் உளோர் இல்பிரிந்து உய்ந்தவர் என்னின் யாவரோ?' (13) பிறர் மனை இருந்தவள் சீதை என்று எண்ணி என் கணவர் போய் விட்டாரோ? இனி என் செய்வேன்? 'பிறர் மனை எய்திய பெண்ணைப் பேணுதல் திறன் அலது என்று உயிர்க்கு இறைவன் தீர்ந்தனன்' (14) எப்போது யான் இப்பழி எய்தினேனோ-அப்போதே யான் உயிர் விட்டிருக்க வேண்டும். நான் இனித் துறக்கமா போகப் போகிறேன்? ஆடவர் பழி சுமக்கினும் சுமக்கலாம்; ஆனால், நற் குடியில் பிறந்த நான் பழி சுமக்கலாமா? மானின் பின் கணவரை அனுப்பிவிட்டு, நீயும் போய்ப் பார் என்று மைத்துனர் இலட்சுமணனை வைது விரட்டிப் பின் நஞ்சனைய இராவணன் அகம் புகுந்த யான் உயிருடன் இருப்பதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா? மயிர் நீப்பின் வாழாக் கவரிமா போன்ற உயர்குணப் பெண்டிர்கள், இவள் கணவனைப் பிரிந்து கள்வன் ஊர் இருந்தவள் என ஏசும்படி வாழ்வேனோ? 'வருந்தல் இல்மானம் மாஅனைய மாட்சியர் பெருந்தவ மடந்தையர் முன்பு பேதையேன் கருந்தனி முகிலினைப் பிரிந்து கள்வன் ஊர் இருந்தவள் இவள் என ஏச நிற்பெனோ? (19) இராமர் அரக்கரை வென்று என்னைச் சிறை மீட்டும் போது, நீ என் மனைக்கு வரத் தகுதியுடையவள் அல்லள் எனக் கூறின், யான் என் கற்பை எவ்வாறு நிலைநிறுத்திக் காட்டுவேன்.