பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. சீதை சொல்லியனுப்பியவை சூடாமணிப் படலம் அனுமன், இராமருக்குச் சொல்ல வேண்டிய செய்தி உண்டா எனக் கேட்ட போது, சீதை சொல்லச் சொன்ன செய்திகள் மிகச் சுவையாயுள்ளன. அவை யாவன? இராமருக்காக யான் இன்னும் ஒரு திங்கள் காலமே இருப்பேன். இது அவர்மேல் ஆணை. பின்னர் யான் உயிர் துறப்பென். (29) என்னை அவர் மனைவியாய் எண்ணாவிடினும், என் பால் அவருக்கு அருள் இல்லையாயினும், தம் வீரத்தைக் காத்தலுக்காவது இங்கே வந்து போர் செய்து என்னை மீட்க வேண்டும். (30) இலக்குமணன் காட்டில் என்னைக் காத்திருந்தது. போலவே இங்கு வந்து மீட்டுச் செல்லுதலும் கடமை யாகும். (31) இராமர் ஒரு திங்களுக்குள் வாராராயின் யான் இறந்து விடுவேன்; அவர் தன் தத்தைக்கு இறுதிக் கடன் செய்தது போல் எனக்கும் கங்கையில் கடன் செய்தல் வேண்டும். இவற்றையெல்லாம் கூற வேண்டும். (32) மாமியார் மூவருக்கும் சீதை இறக்கிறாள்; உங்களைத் தொழுதாள்-எனக் கூறவேண்டும். (33).