பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 என் கை பற்றி மணந்து கொண்ட நாளில், இந்த இப் பிறவியில் இரு மாதரை உள்ளத்தாலும் தீண்டேன் என்று சொல்லித் தந்த செம்மையான வரத்தை அவருக்குக் காதில் கூறி நினைவு செய்வாயாக! 'வந்தெனைக் கரம் பற்றிய வைகல்வாய் இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்' (34) இந்தப் பாடல், படிப்பவர்க்கு வேலை கொடுக்கும் பாட லாகும். இந்தப் பிறவி. இப்பிறவி.இந்த இப்பிறவி என்பதன் பொருள் காணல் வேண்டும் இந்த' என்பது திருமால் மண்ணுலகில் வந்து எடுத்த பிறவிகளைக் குறிக்கிறது இப் பிறவி அந்த மண்ணுலகப் பிறவிகளுள் இராமனாக வந்த (இராமாவதாரம் எடுத்த) பிறவியைக் குறிக்கிறது. இராமன் சீதையிடம் இவ்வாறு கூறியிருப்பானோ.மாட்டானோ! சீதைக்கு இது புரியுமோ-புரியாதோ? நூலாசிரியர் கம்பர் திருமாலின் பிறவியே இராமன் என்றும், திருமகளின் பிறவியே சீதை என்றும் எண்ணுவதால் இவ்வாறு பாடி யுள்ளார். திருமாலுக்கு இலக்குமி (திருமகள்), பூதேவி, நீளாதேவி என மனைவியர் மூவர். அவர்களுள் இலக்குமி மட்டுமே இராமப் பிறவியில் சீதையாக வந்துளாள். எனவே, இந்த இப்பிறவியில். இலக்குமியாகிய உன்னைத் தவிர, பூதேவி, நீளாதேவி என்னும் இரு மாதரையும் மனத்தா லும் தொடேன் என்று கூறியதாக இப்பகுதிக்குப் பலராலும் பொருள் கூறப்படுகிறது. ஒரு மருத்துவர் ஒரு பிணியாளிக்கு மருந்து தந்து, குரங்கை மட்டும் நினைக்கக் கூடாது என்பதைப் பத்தியமாகக் கூறினாராம். இது எப்படி இருக்கிறது: இவ்வாறு கூறியதால் பத்தியம் என்பது நினைவு வரவே, கட்டாயம் குரங்கின் நினைவு வந்துதான் தீரும். இங்கேயும் அதே கதைதான்! பூதேவியையும் நீளாதேவியையும்