பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 சரி போகட்டும்! இதற்கு இன்னொரு விதமாகப் பொருள் கூறினால் என்ன? இராமனை ஏகபத்தினிவிரதன்' என்று கூறுகிறார்க.ே --இதன் உட்பொருள் என்ன? நாம் எல்லாம் மட்டும் பல பத்தினிவிரதர்களா என்ன? நாமும் ஏகபத்தினி விரதர்கள் தாமே? ஆனால், இராமன் நம்மைப் போன்றவன் அல்லன்; அரச குலத்தின ன் அவன். மூன்று பட்டத்தரசிகளை மணந்து.ெ கா ன் டி ரு ந் த த ல் லா ம ல், மேலும் ஒரு நகராட்சியையே (முனிசிபாலிட்டியையே) அரண் மனைக்குள் ந ட த் திய - அதாவது - அறுபதினாயிரம் மனைவிகளை மணந்த தசரதனுக்கு மகன் இராமன். அரசர்களுக்குப் பல மனைவியர் உண்டு என்பது வரலாறு கூறும் உண்மை. இத்தகைய அரசகுலத்தில் பிறந்த-அரசனாகிய இராமன் பல மனைவியரை மணக்காமல் சீதை ஒருத்தியோடு அமைந்துவிட்டமை அவனுக்குச் சிறப்பாகும். உலகியலில் எளியோர் சிலர் கூட மனைவியர் இருவர்-மூவரைக் கொண்டிருப்பதைக் காண லாம். இந்த நிலையில், அரசனாகிய இராமன் ஒரு மனைவி யோடு நிறுத்திக் கொண்டமை பெருமைக்கு உரியதன்றோ? இதைத்தான், இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன்' என்று இராமன் கூறியிருக் கிறான் இதன்படி இதற்குப் பொருள் என்னவாம்? இந்த” என்பது, பொதுவாக மனிதப் பிறவியைக் குறிக்கிறது. இப் பிறவி என்பது, மனிதர்களுக்குள் இந்த அரசப் பிறவி என்பதைக் குறிக்கின்றது. எனவே, அரசர்கள் பல மனைவி யரைக் கொள்வர்; யான் ஒரு மாதரைத் தவிர இரு மாதரைக் கொள்ளேன் என்னும் கருத்தில் இராமன் கூறியதாக இப் பகுதிக்குப் பொருள் செய்து பார்க்கலாமே! மேலும் இப்பாடலில், திருமணம் என்பதற்குக் 'கரம் பற்றுதல்' என்னும் பெயர் தரப்பட்டுள்ளது. எனவே,