பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஓர் ஆடவன் தன் மனைவியின் கையைத் தவிர, வேறு பெண்ணின் கையை எந்த வகையிலும் தொடாதிருக்கும் நமது நாகரிகத்தையும் ஈண்டு எண்ணிப் பார்க்க வேண்டும். வடமொழியில் இதைத்தான் பாணிக் கிரகணம்' என்கிறார்கள் பாணி=கை; கிரகணம் பற்றுதல்-ஆகும். சிந்தையாலும் தொடேன் என்பதில் உள்ள உம்மை மிக உயர்ந்த பேராண்மையைக் குறிக்கிறது. பிறன் மனை நோக்காத பேராண்மை’ என்பது வள்ளுவம். நோக்காதது மட்டு மன்று-நினைத்தலும் செய்யமாட்டானாம் இராமன், "தொடேன்' என்பது தொடுதலுக்கும் உடலுறவு கொள் வதற்கும் உள்ள இடைவெளி மிகுதி என்பதை அறிவிக் கிறது. இராமன் சீதைக்குத் தந்த இவ்வாக்கு செம்மையான வரமாக-செவ்வரமாகக் கருதப்பட்டுள்ளது. மற்றும், தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்' என்பதில் உள்ள *திருச் செவி என்பது நோக்கத்தக்கது. இது இராமர் மேல் வைத்திருக்கும் உயர்வை அறிவிக்கின்றது. மற்றும் நீ போய் அவருடைய திருச்செவியிலே சொல்லு என நையாண்டி செய்வது போன்ற-அதாவது தனது கசப்பையும் வருத்தத் தையும் அறிவிப்பதாக உள்ள குறிப்பையும் தருகிறது. மேலும் சாற்றுவாய்' என்பதும் கவனிக்கத் தக்கது. இது பரக்க உரக்க நன்கு தெரியும் வண்ணம் கூறுதல் ஆகும். 'பறைசாற்றுதல்’ என்னும் வழக்காற்றால் இது புலனாகும். எனவே; ‘சாற்றுவாய்' என்பது, இராமரிடம் அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொல் என்ற குறிப்பையும் தருகிறது. மற்றும், வந்து எனைக் கரம் பற்றிய' என்பதில் உள்ள “வந்து' என்பது, நாங்களாகப் போகவில்லை-அவர்களாக வந்தார்கள்-எனவே, என் னைக் கைவிடலாகாது என்னும் குறிப்பைத் தந்து படிப்பவர்க்கு மகிழ்ச்சி ஊட்டுகிற தன்றோ? மேலும் சீதை அனுமனிடம் செய்தி சொல்கிறாள்: யான் இறந்து விடுவேனாயின், மீண்டும் வந்து பிறந்து