பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 அதாவதுட அடுத்த பிறவியலும்- இராமரையே மணக்கும் வரம் வேண்டினாள் என்று கூறுக: (35) அரசு ஆளவும், அவருடன் யானைமேல் உலா வரவும், பலவகைக் கோலங்களைக் காணவும் யான் கொடுத்து வைக்கவில்லை. இதற்காக, என் விதியை- ஊழ்வினையை எண்ணி நோகிறேன். (36) தன்னை (இராமனை) மக்கள் எதிர்பார்த் திருப்ப தாலும், பரதனும் அரசை ஒப்படைக்கக் காத்திருப்ப தாலும், அன்னைமார்களைப் பார்க்க வேண்டும் என்னும் அவா இருப்பதாலும், அவர் (இராமர்) அயோத்தி செல்லா மல், என்னை மீட்க இலங்கைக்கா வருவார்? 'தன்னை நோக்கி உலகம் தளர்தற் கும். அன்னை நோய்க்கும், பரதன் அங்கு ஆற்றுறும் இன்னல் நோய்க்கும், அங்கு ஏ குவ குன்றியே என்னை நோக்கி இங்கு எங்ங்னம் எய்துமோ?' (37) மற்றும், என் தாய் தந்தையரையும் மற்றுமுள்ள சுற்றத்தாரையும் கண்டால், என் வணக்கத்தை அவர் கட்குக் கூறுவாயாக. இராமரைத் தொடர்ந்து சென்று காத்து அயோத்திக்கு அரசனாக்கும்படி சுக்கிரீவனிடம் சொல்வாயாக! 'எந்தை யாய் முதலிய கிளைஞர் யார்க்கும் என் வந்தனை விளம்புதி; கவியின் மன்னனை, சுந்தரத் தோளனைத் தொடர்ந்து காத்துப் போய் அந்தமில் திருநகர்க்கு அரசன் ஆக்கு என்பாய்' (38) என்று இவ்வாறெல்லாம் சீதை அனு மனிடம் சொல்லி அனுப்பினாள். அதாவது, இராமன், இலக் குமணன், மாமியார், தன் பெற்றோர் மற்றும் உள்ள உறவினர்கள், சுக்கிரீவன் - ஆகியோர்க்கெல்லாம் சொல்லும்படியாகப் பல செய்திகள் கூறினாள் சீதை.