பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. இராவணனுக்கு அறிவுரைகள் கம்ப இராமாயண நூலில், பல்வேறு சூழ்நிலைகளில் பலர் இராவணனுக்கு அறிவுரை கூறியதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இங்கே, சுந்தர காண்டத்தில், சீதை, அனுமன், இந்திரசித்து, வீடணன் ஆகியோர் இராவணனுக்கு. அறிவுரைகள் தந்ததாகக் கம்பர் பாடியுள்ளார். இனி அவற்றைக் காண்பாம்: 1. சீதையின் அறிவுரை தன் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்திய இராவணனுக்குப் பின்வருமாறு சீதை அறிவுரைகள் வழங்கினாள். காட்சிப் படலம்: இராவணா! வீணாய் அரக்கர்களைச் சாக விடாதே. உன்னால் உலகம் அழியும். (121) திருமால், நான்முகன், சிவன் ஆகிய தெய்வங்களைப் போல் இராமரையும் எண்ணி விடாதே. இராமர் மிக்க வலிமை உடையவர். (122) இராமர் மனிதர்தானே என்று எளிமையாய் எண்ணி விடாதே. ஆயிரம் தோளுடைய கார்த்த வீரியனைக் கொன்ற, பரசுராமன் மனிதனே. .