பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167 நீ அனுப்பிய சிங்கரர்கள், சம்புமாலி, ஐம்பெரும் படைத்தலைவர்கள், மற்றும் படைஞராகிய அரக்கர் ஆகிய அனைவரும் இறந்தாரே யன்றி ஒருவராவது மீண்டிலர். அப்படியிருந்தும் நீ மேலும் அக்ககுமாரனை அனுப்பி இறக்கச் செய்தாய். அந்தக் குரங்கு, சிவனோநான்முகனோ-திருமாலோ என்று ஐயுறும்படி உள்ளது. நீ எண்திக்கு யானைகளையும் முப்புரம் எரித்த சிவனது கயிலைமலையையும் மூன்று உலகங்களையும் முன்பு வென்றாய். இப்போதோ, அக்ககுமாரனையே வென்ற குரங்கை வெல்லுதல் என்பது அழுகைக்கு உரியதேயன்றி அறிவுடைமையாகாது: 'திக்கய வலியும் மேல்நாள் திரிபுரம் தீயச்செற்ற முக்கணன் கயிலையோடும் உலகொரு மூன்றும் வென்றாய் அக்கனைக் கொன்று நின்ற குரங்கினை ஆற்றல் காட்டி புக்கினி வென்றும் என்றால், புலம்பன்றிப் புலமைத் தாமோ? (11) இவ்வாறெல்லாம் இந்திரசித்து தந்தை இராவணனுக்கு அறிவுரை கூறிப் பார்த்தான். 4. வீடணன் அறிவுரை வீடணன் முதலியோர், சீதையைச் சிறைப்படுத்தாது விட்டுவிட வேண்டும் என்று அறிவுரை கூறியது ஒருபுறம் இருக்க, சுந்தர காண்டத்தில், வீடணன் ஒருவித அறிவுரை அண்ணன் இராவணனுக்குக் கூறியிருப்பதைக் காணலாம், இந்திரசித்து அனுமனைக் கட்டி இராவணனிடம் கொண்டு வந்தான். சிறிது உரையாடிய பின்னர் அனுமனைக் கொல்லும்படி இராவணன் கட்டளையிட்டான். உடனே அரக்கர் அனுமனைக் கொல்லமுயன்றபோது, நில்லுங்கள். நிறுத்துங்கள்’ என்று நீதியனாகிய வீடணன் தடுத்து நிறுத்தினான். பின்எழுந்து நின்று கைகூப்பி வணங்கி,