பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 மற்றும், சிவன்-திருமால் முதலியோர்க்கும், நம்மைப் பொறுக்காத-மதிக்காத தேவர்கட்கும் இது நகைப்பை உண்டாக்கும். நீயோ எல்லா உலகங்களையும் காக்கும் மன்னன்! எனவே, பிறர் அனுப்ப வந்த தூதனைக் கொல்லுதல் பெரிய குற்றமாகும்: 'முத்தலை எஃகன் முராந்தகன் முனிவன் முன்னா அத்தலை நம்மை நோனா அமரர்க்கும் நகையிற்றாமால் எத்தலை உலகம் காக்கும் வேந்தன் நீ, வேற்றோர்ஏவ இத்தலை எய்தினானைக் கொல்லுதல் இழுக்கம் இன்னும்' (110) மற்றும், இராம இலக்குமணர், நம் தங்கை சூர்ப்பண கையைக் கொல்லாமல், சதையும் மூக்கையும் சிதைத்து, போய் நடந்ததைக் கூறுக என்று உயிரோடு அனுப்பி விட்டனர். அவர்கள் உண்மையான வீரர்கள் ஆவர்? 虚 அனுமனைக் கொல்வாயேல் நம்மிடம் வந்து அவன் கண்ட நமது சிறப்புகளையெல்லாம் அவன் போய் இராம இலக்குமணருக்குச் சொல்லாதபடி செய்து விட்டாயா வாய்-என்று பொருந்த அறிவுரை பகர்ந்தான்: இளையவள் தன்னைக் கொல்லாது இருசெவி மூக்கொடு ஈர்ந்து விளைவுஉரை என்று விட்டார், வீரராய் மெய்ம்மை ஒர்வார் களைதியேல் ஆவி, நம்பால் இவன் வந்து கண்ணின் கண்ட அளவுரை யாமல் செய்தி யாதி என்று அமையச் சொன்னான்' (111) இவ்வாறு வீடணன் அறிவுரை வழங்கினான். நீதியாய், தக்கோய், மறை வல்லோய்-என்றெல்லாம் அண்ணனைத் தூக்கி வைத்துப் பேசி, வேண்டும் மெய்யுரையை விளம்பி னான்’ (106) என்பதாகப் பாடிய கம்பரின் நயமான பாடல் பகுதிகள் மிகவும் சுவைக்கத் தக்கன. சு-11