பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. உரையாடல்கள் சுந்தர காண்டத்தில்மூேவகையான சுவையான உரை யாடல்கள் உள்ளன. அவை இராவணனும் சீதையும் உரையாடல், இராவணனும் அனுமனும் உரையாடல்என்பனவாம். இனி முறையே அவற்றைக் காண்பாம். 1. இராவணன்-சீதை உரையாடல் (காட்சிப் படலம்) இராவணன் : இராவணன் அசோகவனம் அடைந்து, சீதையைத் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு கெஞ்சுகிறான் : சீதாய்! எனக்கு அருள் செய்வது எப்போது? என்று, தன்னைக் கொல்ல இருக்கும் நஞ்சை அழித்து எனத் தப்புக் கணக்கு போட்டுக் கேட்கிறான் (97) இன்று-நாளை என நாள்கள் வீணே கழிகின்றன. என்னைக் கொன்று இறந்த பின் கூடுவாயோ? (99) யான் உலகம் மூன்றின் தலைவன். எனக்கு எந்தத் துன்பமும் இல்லை. ஆனால், உன் காரணமாகக் காமன் என்னைத் துன்புறுத்துகிறான். இத் துன்பம் ஒன்றே உளது : - - - -