பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 'உலகம் மூன்றும் ஒருங்குடன் ஒம்பும் என் அலகில் செல்வத்து அரசியல் ஆணையில், திலகமே உன் திறத்து அனங்கன் தரு கலகம் அல்லது எளிமையும் காண்டியோ?” (100) என்னால் கிடைக்கவிருக்கும் பெரிய செல்வத்தை இழக்கின்றாய். நீ இராமனுடன் வாழ்வது வெற்று மானுட வாழ்வு தானே? (101) நோக்கின்றார் முதலியோர், என் சொல் ஏற்கின்றா ருடன் உறையும் இன்பமே பயன் எனக் கொள்வர். (102) உன்னைப் படைத்த நான்முகன் உன்னிடம் இரண்டு இல்லாதவாறு உன்னைப் படைத்து விட்டான். அதாவது, இருப்பும், உன் மனத்தில் அருளும் இல்லாதவாறு உன்னைப் படைத்து விட்டான். அதனால் தான் என்மேல் அருள் செலுத்தவில்லை. - "தெருளும் நான்முகன் செய்த துன் சிந்தையின் அருளும் மென் மருங்கும் அரிது ஆக்கியே' (103) (பெண்டிரிக்கு இடுப்பு சிறுத்திருக்கும் என்ற மாதிரியில் இடுப்பே இல்லை எனக் கூறுவது ஒருவகை இலக்கிய மரபு) மேலும் கூறுகிறான்: நாளும் இளமையும் நிலை நிற்காதவை-மாளக்கூடியவை. எனவே, இப்போது நாளை வீணாக்கி விடின், பின் இன்ப வாழ்வேது? (104) உன்னால் எனக்கு அழிவு நேரினும் நேருக. உன்னை விட்டால் வேறு அழகுக்கு யார் உளர்? (105) சனகர் வீட்டில் பிறந்தவர்க்குப் (சீதைக்கு) பெண்மை யும் திண்மையும் இருப்பினும், (எனக்கு அருள் புரியும்) வண்மை-வள்ளன்மை மட்டும் இல்லாது போனதேன்?