பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 'பெண்மையும் அழகும் பிறழாமானத் திண்மையும் முதல்யாவையும் செய்யவாய் கண் மையும் பொருந்திக் கருணைப்படா வண்மை என் சொல் சனகர் இல் மாண்டவர்?' (106) நல்லறத்தின் பயன் ஊட்டும் வாய்ப்பான காலத்தை நழுவ விட்டு இகழலாமா? (107), என் உயிரைப் போக்கி வீணே பழிகொள்ளப் போகி றாயா? (108). தேவர் தேவியர் எல்லாம் காலில் விழுந்து கை தொழக் கூடிய மூவுலகத் தலைமையாட்சி உன்னை அடைய இருக் கிறது. நீ அதை மறுக்கிறாய். உன்னிலும் ஏழையாரோ? 'தேவர் தேவியர் சேவடி கைதொழும் து வில் மூவுலகின் தனி நாயகம் மேவு கின்றது நுன் கண், விலக்கினை ஏவர் ஏழையர் ந்ன்ன ன் இலங்கிழாய்' (109), மூன்றுலகையும் ஆட்சி செய்யும் தனது வீரப் பெருமையை அடிமையாக்கிக் கொண்டு எனக்கு அருளுக. என்று கெஞ்சித் தன் கைகளைத் தலைகளின் மேல் வைத்துக் கும்பிட்டுச் சீதையின் காலடியில்-கீழே விழுந்து, பழி பாராத இராவணன வணங்கினான். 'குடிமை மூன்று லகும் செயும் கொற்றத்தென் அடிமை கோடி, அருளுதியால், எனா முடியின் மீது முக்ழ்த்து உயர்கையினன் படியின் மேல் விழுநதான் பழிபார்க்கலான்’ (110). இவ்வாறு கெஞ்சிய இராவணனை நோக்கிச் சீதை. வெய்ய மாற்றங்கள் விடுத்தாள்: சீதை : கற்புடைய குலமாதரிடம் நீ இவ்வாறு நடந்து கொள்வது தக்கதன்று. (112).