பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 மேரு மலை என்றென்ன-பதினான்கு உலகையும் இராமன் அம்பு அழிக்கவல்லது. அறிவிலியே! பொருந்தாதன பேசி உன் தலை பத்தும் இழந்திடாதே. (113) நீ இராம இலக்குமணர்க்கு அஞ்சியதால், வஞ்சனை யாய் மாயமான் விட்டு, நீ மாறுகோலம் பூண்டு வந்தாய். நீ உய்ய வேண்டுமெனில் என்னை விட்டுவிடு. (114) உன் பத்துத் தலைகளையும் இருபது தோள்களையும் அம்பு விட்டு அழித்தல் இராமருக்கு ஒரு திரு விளையாட்டு போலாம். (115) நீ அன்று பறவை சடாயுவுக்குத் தோற்றாய். தலையில் கங்கை தாங்கிய சிவன் தந்த வாள் உன்னிடம் இருந்ததால் பின்பு வென்றாய் இல்லையேல் இறந்திருப்பாய் உன் நோன்பு, வாழ்நாள் உறுதி, பெற்ற வரம் எல்லாம் எமனுக்குத்தான் விதிவிலக் காய் அழிக்க முடியாதிருக்க லாம். ஆனால், இராமரின் அம்பி ன் முன் இவை நிற்க மாட்டா. "தோற்றனை பறவைக்கு அன்று; துள்ளுநீர் வெள்ளம் சென்னி ஏற்றவன் வாளால் வென்றாய்; அன்றெனின் இறத்தி யன்றே? நோற்ற நோன்பு உடைய வாழ்நாள் வரமிவை நுனித்த எல்லாம் கூற்றினுக்கு அன்றே? வீரன் சரத்திற்கும் குறித்த துண்டோ' (116) உன் வாளும் வாணாளும் வலி மையும் வரமும் மற்ற எவையும் இராமன் அம்பால் விலக்கப்பட்டுவிடும். நீ அழிதல் உறுதி. விளக்கின் முன் இருள் இருக்க முடியுமோ? (117)