பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 எனவே, கற்பனை என்பது, இவ்வளவு சொன்னால் போதும் என்ற அளவுக்குமேல், இன்னும் சிறிது கூட்டியோ -புதுக்கியோ-அழகுபடுத்தியோ- நயப்படுத்தியோகூறுவது என்பது புலனாகும். •. எல்லாம் வளர்வது போலக் கற்பனையும் கம்பன் கால மாகிய இடைக் காலத்திலும் அதற்கும் பிற்காலத்திலும் வளர்ச்சி பெற்று-அதாவது-பெரிது படுத்தப்பட்டு-உண் மைக்கு மேலும் புனைந்துரைக்கப் பட்டு, அண்டப்புளுகுஆகாயப் புளுகு' என்ற நிலையை அடைந்து விட்டது. இந்த அடிப்படையுடன் கம்பனது கற்பனை நயத்திற்கு, வருவோமாக. மயேந்திர மலை சீதையைத் தேடத் தெற்குப் பக்கல் அனுப்பப்பட்ட அனுமான், இக் கரையில் உள்ள மயேந்திர மலையிலிருந்து. அக்கரையில் உள்ள இலங்கைக்குத் தாவுகின்றான். நீளத் தாண்டுதல் (High Jumb) செய்பவர்கள் முதலில் கீழே: வன்மையாக ஊன்றித்தானே பின்னர் மேலே உந்தி எழுந்து தாண்டுவார்கள். அதுபோல அனுமன் மயேந்திர மன்லயை அழுத்தி ஊன்றி மேலே எழும்பினான். அப்போது மயேந்திர மலையிலும் சுற்றுப் புறத்திலும் நிகழ்ந்த மாற்றங்களைக் கம்பர் மிகவும் அழகாக-சுவை: யாகக் கற்பனை செய்துள்ளார். வருமாறு: 1. அனுமன் ஊன்றி எழுந்தபோது மலை குலுங்கின. குலுக்கத்திலே, புற்றுக்குள்-வளைக்குள் இருந்த பாம்புகள் எல்லாம என்னவோ -ஏதோ-என்று அஞ்சி வெளியில் வந்து ஊர்ந்து சென்றனவாம். இக்காட்சி, மலையின் வயிறு பிளந்து உள்ளேயிருந்த குடல்கள் பிதுங்கி வெளியில் வந்து, விட்டதுபோல் தோன்றிற்றாம். - ༄༣ - 2. குகைக்குள் இருந்த சீயங்கள் (சிங்கங்கள்) குகைப் பாறையோடு முட்டி மோதிக் குருதி கக்கினவாம்.