பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நீ கயிலையை எடுத்தபோது உன்னை அமுத்தி வென்ற சிவனிட மிருந்து வந்த வில்லை இராமர் ஒடித்த ஒலியை நீ கேட்கவில்லை போலும் (118), கயிலை மலையை எடுத்தேன்-எட்டுத் திக்குகளையும் வென்றேன்-என்றெல் றாம் மறம் பேசும் நீ, இளைய இலக்குமணன் வில் எடுத்தால் எதிர் நிற்க முடியாது. அத்தகைய நீ ஒரு டெண்ணிடம் தாழ்ந்து கெஞ்சுகிறாய். (119). ஏழை இராவணா! எம் 56ುಖಮೀರ! இராமன் இங்குப் படை எடுத்துவரின் உன் உயிரும் இலங்கையும் இன்ன பிறவும் அழியும். (120). என்றெல்லாம் சீதை இராவணனிடம் கடுஞ்சொல் கூறித் தாழ்த்தினாள். பின்னர் நயவுரை பகர்ந்தும் திருத்த முயன்றாள். சீதை இணங்காமையால் இராவணனுக்கு மூண்ட சினமாகிய ஊழித் தீ, பின் அவள் மேல் உள்ள காமமாகிய வெள்ள நீரால் அவிய, அவன் மேலும் கூறுவான்: (137) உன்னைக் கொல்ல எண்ணினேன்-ஆனால் கொல்ல வில்லை. என்னால் முடிவது-முடியாதது என எதுவும் உலகில் இல்லை. வெற்றி-தோல்வி எல்லாம் எனக்கு ஒரு விளையாட்டாகும். "ஒவ்வது ஈது ஒல்லாதது ஈது என்று எனக்கும் - ஒன்று உலகத் துண்டோ? வெல்வதும் தோற்றல் தானும் விளையாட்டின் விளைந்த மேனாள் (138). எனனோடு போர் புரிய வருபவர் யார்? உன்னை அடைய இராமனைக் கொல்லின் நீ உயிர்விடுவாய்; நீ உயிர் விடின் உன் மேல் காதல் கொண்ட யான் உயிர்விடுவேன். அதனால்தான், யான் இராம இலக்குமணரைக்