பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 கொல்லாமல், வஞ்சகமாக மாய மானை அனுப்பி அவர் களை அப்புறப்படுத்தி உன்னைக் கொண்டு வந்தேன். 'ஒன்றுகேள் உரைக்க: நிற்கோர் உயிர் என உரியோன் தன்னைக் கொன்றுகோள் இழைத்தால், நீ நின் உயிர்விடின் கூற்றம் கூடும்; என்றன் ஆருயிரும் நீங்கும் என்பதை இயைய எண்ணி அன்று நான் வஞ்சம் செய்தது; ஆர்எனக்கு அமரில் நேர்வார்? (139) மான் எனப் போந்த அம்மானிடர், வந்தவன் யான் எனத் தெரிந்தால் திரும்பி வாரார்; தேவராயினும்யாருமே என்னிடம் வாரார். (140) இந்திரனே எனக்கு ஏவல் செய்கிறான் எனில், எனது பெருமைக்கு இது போதாதா? (141) உன் காரணமாக அம்மனிதர் இருவரையும் கொல்லா மல் இருக்கிறேன். யான் விரும்பின் அவர்களை அழைத்து வந்து எனக்கு ஏவல் செய்ய வைப்பேன். (142) ஒருவேளை அம்மனிதருடன் என் வீரம் செல்லா தெனினும், யான் அவர்களைக் கொல்ல முடியாதெனினும், யான் விரும்பின், அவர்களைப் பிடித்து இங்கு இழுத்து வரச் செய்வேன். (143) வீணாய் நீ அவர்கட்குத் தீங்கு நேர விடாதே. (144) யான் எண்ணினால், அயோத்தி சென்று பரதன் முதலான வரை அழித்தும், மிதிலை சென்று உன் பெற்றோர் முதலியோரையும் பூண்டோடு அழித்தும் உனது உயிரையும் போகச் செய்வேன். குறை வயது உடையவளே! என்னை நீ இன்னும் நன்றாகப் புரிந்து கொள்ளவில்லை: