பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 "பள்ளநீர் அயோத்தி நண்ணிப் பரதனே முதலினோர் ஆண்டு உள்ளவர் தம்மை யெல்லாம் உயிர்குடித்து, ஊழித் தீயின் வெள்ளநீர் மிதிலை யோரை வேரறுத்து எளிதின் எய்திக் கொள்வென் நின் உயிரும் என்னை அறிந்திலை குறைந்த நாளோய்' (145) என்றெல்லாம் இராவணன் கூறிச் சீதையை அச் சுறுத்தினான். ஆனால் பயன் ஒன்றும் இல்லை. 2. அனுமன் சீதை உரையாடல் அனுமனும் சீதையும் உரையாடிக் கொண்டதை இவண் காண்பாம்: -உருக்காட்டுப் படலம்: அனுமன் கூற்று சீதை வருந்தித் தற்கொலை செய்து கொள்ள மாதவிப் பொதும்பரை அடைந்தபோது, அனுமன் அவள் முன் தோன்றித் தொழுது, 'இராமரின் தூதன் யான்; இராமர் அனுப்ப இங்கு வந்தேன். இங்கே நீ இருப்பதை இராமர் அறியார். நீ என்னை ஐயுறல் வேண்டா. அடையாளம் கொண்டு வந்துள்ளேன் . இராமர் சொல்லியனுப்பிய உரையும் உள்ளது. எல்லாம் உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெரியக் காணலாம் என்னை வேறாக நினைக்க 泛” வேண்டா” இதன் பாடல் இது: : 'ஐயுறல் உள்து அடையாளம்; ஆரியன் மெய்யுற உணர்த்திய உரையும் வேறுள; கையுறு நெல்லியங் கனியின் காண்டியால்; நெய்யுறு விளக்கனாய், நினையல்வேறு என்றான்' (25)