பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 சீதையின் வினா : கேட்ட சீதை, இவன் அரக்கனாகவோ- அல்லது குரங்காகவோ இருப்பினும், இராமன் பெயர் கூறி எனக்கு உயிர் தந்தான்; இவன் நல்லனாகத் தெரிகிறான்; எனவே, இவன் வினவுவதற்கு உரியவனே என்று எண்ணி, "வீரனே! நீ யார்?' என்று வினவினாள். அனுமன் விடை அன்னையே! இராமர் நின்னைப் பிரிந்தபின் நடந்தது கூறுவேன். எம் தலைவன் சுக்கிரீவன்; அவன் தமையன், இராவணனை வாலில் சுற்றித் தேய்த்த வாலி. அந்த வாலியை இராமர் கொன்று சுக்கிரீவனுக்கு முடி சூட்டினார். என் பெயர் அனுமன். வானர சேனைகள் எழுபது வெள்ளம் உள்ளன. நான்கு திக்குகட்கும் உன்னைத் தேடப் பிரிந்து சென்றுள்ளன. அங்கதன் தலைமையில் இரண்டு வெள்ளம் சேனைகள் தெற்கு வந்துள்ளன. யான் அப்படையைச் சேர்ந்தவன். இராமர் உன்னைப் பிரிந்ததால் மிகவும் வருத்த முற்றுள்ளார். நீ வழியில் கழற்றிப் போட்ட அணிகலன் களை நாங்கள் எடுத்து வைத் திருந்து அவரிடம் காட்டினோம். அதனால் அவர் உயிர் நிலை பெற்றது. அதனால் உன் மங்கல நாண் (தாலி) காப்பாற்றப்பட்டது. அந்தப் பெருமை உன் அணிகலன்கட்கே உரியது: "கொற்றவற்கு ஆண்டு காட்டிக் கொடுத்தபோது அருத்த தன்மை பெற்றியின் உணர்தற் பாற்றோ? உயிர்நிலை பிறிதும் உண்டோ? இற்றை நாள் அளவும், அன்னாய்! அன்று நீ இழித்து நீத்த மற்றைநல் அணிகள் காண்உன் மங்கலம் காத்த மன்னோ' (35)