பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சீதையின் வினா : கேட்ட சீதை, நம்பிக்கைக் கோடு படர, இராமரின் வடிவழகு எத்தகையது என்று வினவினாள். அனுமன் விடை : பின்னர், அனுமன், இராமனது அடிமுதல் முடி வரை உள்ள வடிவழகைப் பற்றி (பாதாதி கேசமாகக்) கூறலானான்: இராமரின் திருவடி தாமரையாகும். விரல் ஞாயிற்றின் ஒளி- கணைக் காலுக்கு ஒப்பே இல்லை. அவர் துடைக்கு. யானைத் துதிக்கை நாணும். கொப்பூழ் பொய்கைபோல் ஆழ்ந்தது- மார்பு திருமகள் நோற்றுப் பெற்றது. கைகள் எண் திக்கு யானைக் கைகள்- தோள் மலை- கழுத்து சங்கு- முகமும் தாமரை- புன்முறுவல் நளினமான துவாய் பூக்காத பவளம்- பல் முத்தோ நிலவொளியோமூக்கு இந்திர நீலம்- புருவம் வில்- நெற்றிக்குப் பிறை ஒவ்வாது- தலை மயிர் சடையாயிற்று - நடை சீயநடைஇவை வடிவடையாளங்கள். இனி, இராமர் சொல்லி அனுப்பிய அடையாள மொழி களைக் கூறுவேன் : சீதாய்! உன்னால் காட்டில் நடக்க வியலாது; என்னோடு வர வேண்டா; அன்னையர்க்கு உதவியாக இங்கேயே இரு! நாள்கள் விரைவில் ஒடி விடும்- என்று யான் கூறியபோது, உடுத்த துகிலோடும் உயிர் பிரியும் உடலோடும் முனிவோடும் சீதை அயல் அகன்று நின்றாள்-இதை அவளிடம் நினைவு. செய். முடிதுறந்து சீதையோடு காடுநோக்கி நகரின் கடை வாயிலைக் கடக்கும் முன்பே, காடு எங்கே உள்ளதுஎவ்வளவு தொலைவில் உள்ளது-என்று கேட்ட அவளது. பெண்மைத் தன்மையையும் நினைவு செய்.