பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183 வர, இராவணன் சாலைக்கு வந்து எடுத்துச் சென்றபின் , இராமர் உன்னைக் காணாமல், உயிர் இல்லாத பொறிப் (எந்திரப்) பாவை போல் (பொய் உயிரோடு) திரிந்து உன்னைத் தேடினார். அவரது உயிர் நீயே யாதலின், நீ இங்கு இருத்தலால் அவரது உயிர் போனதாகக் கருதப்படவில்லை. எவ்வாறு அவர் உயிர் போக முடியும்? தேண்டி நேர்கண்டேன் வாழி தீதிலன் எம்கோன் ஆகம் பூண்டமெய் உயிரேபோகப் பொய் உயிர் போல நின்ற ஆண்டகை நெஞ்சினின்றும் அகன்றிலை அழிவு உண்டாமோ? ஈண்டுநீ இருந்தாய் ஆண்டங்கு எவ்வுயிர் விடும் இராமன்?’’ (77) உயிராக நீ இருக்கும்போது, வேறு எந்த உயிரை இராமன் விடமுடியும்? வழியில் சடாயுவைக் கண்டான். சடாயு இராவணனைப் பற்றிச் செய்தி கூறி இறந்ததும் இராமன் ஈமக் கடன் செய்தான். மாயமானால் துயர் நேர்ந்ததால், மானினத்தையே இராமன் வெறுத்தான். இறுதியாகச் சுக்கிரீவனையும் எங்களையும் கண்டான். சுக்கிரீவனின் வேண்டுகோளின்படி வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டம் ஈந்தான். நான்கு திங்கள் காலம் கடந்ததும் உன்னைத் தேட வானரங்கள் அனுப்பப் பட்டனர். தென் திசை நோக்கிய யான் இங்கு வந்தேன். இதுதான் நடந்த வரலாறு என்று அனுமன் அறிவித்தான். சீதையின் வினா: இவ்வளவு பெரிய கடலை நீ எங்ங்னம் கடந்து வந்தாய்? அனுமன் விடை: இராமன் அருள் பெற்றவர் மாயையாம் கடல் கடப்பது போல், யான் இராமன் அருளால் காலால் கடந்தேன்.