பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஊரும் அரக்கரும் அழிவது உறுதி (குரங்குகளால் இராவணன் அழிவான் என்பதற்கு ஏற்ற உவமை இது) என்று அனுமன் கூறி, இாாமனை அடையத் தன்னுடன் வருமாறு சீதையை வேண்டலானான் : (சூடாமணிப் படலம்) அன்னையே! என் தோள்மேல் ஏறி என்னுடன் வருக. நொடிப் பொழுதில் போய் இராமனிடம் உன்னைச் சேர்ப் பேன் (3) இடையில் அரக்கர் வரின் அழிப்பேன்; யான் ஒருவ ராலும் அழியேன்; வெறுங்கையோடு பெயரேன். (4) இலங்கையோடு செல்லவேண்டு மெனினும் இலங்கையைப் பெயர்த்து ஒரு கையில் ஏந்திக் கொண்டு, தடுக்கும் அரக்கர்களையும் வென்று உன்னை இராமனிடம் சேர்ப்பேன். - (5) இராமனிடம் சென்று, சீதை அங்கு இருக்கிறாள்சிறை வைக்கப்பட்டிருக்கிறாள்-என்று சொன்னால் என் அடிமை என்னாம். (6) புண்படாத தோள்களோடு போய் இராமனிடம் பகைவர் பெருமையைச் சொல்லவா? என் உயிர் காக்க எண்ணிக் கண்டு வரவில்லை என்றோ-உடன் அழைத் துக் கொண்டு வரவில்லை என்றோ-கூறுவேனோ? 'புண்தொடர் வகற்றிய புயத்தினொடு புக்கேன், விண்டவர் வலத்தையும் விரித்துரை செய்கேனோ? கொண்டு வருகிற்றிலென்; உயிர்க்கு உறுதி - கொண்டேன்; கண்டு வருகிற்றிலென் எனக் கழறுகேனோ?” (7) இலங்கையை உருக்கி, அரக்கனை முருக்கி, அரக்கர் குலம் முழுவதையும் அழித்துப் பின்னர் அழைத்துப்போ என்றாலும் அங்ங்னமே செய்வேன். (8)