பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 நீ இராமனை அடைந்தபின், அவன் உன்னோடு இலங்கைக்கு வந்து அரக்கர் குலம் அழிப்பது நன்று. (9) எனவே, இனிக்கூற வேறொன்றும் இல்லை. யான் இந்த நற்பேறு பெறச்செய். மீண்டு சென்று துயர் ஆறலாம்; என் தோள்மேல் ஏறி அருளுக”-என்று அனுமன் வேண்டிச் சீதையின் அடி பணிந்தான்: (10) சீதையின் மறுப்புரை : தன்னுடன் வரச்சொன்ன அனுமனுக்குச் சீதை மறுப்புக் கூறலானாள்: (சூடாமணிப் படலம்): என்னை எடுத்துக்கொண்டு செல்வது உனக்கு அரிய செயலன்று; உன் வலிமைக்கு ஏற்றதே. ஆயினும், இது உரியதன்று என என் பெண்மதி கூறுகிறது. (12) கடல் நடுவே அரக்கர் வந்து மறிக்கின்ற நீ அவர்களைக் கவனிப்பாயா? என்னைக் காப்பாயா? (13) மற்றும், உன்னுடன்வரின் இராமரின் வில் வலி குறை பாடுடையதாகும். என்னை வஞ்சித்த அரக்க நாய்களைப் போல நீயும் என்னை எடுத்துச் செல்லலாமா? 'அன்றியும் பிறிதுள தொன்று ஆரியன் வென்றி வெஞ்சிலை மாசுனும்; வேறினி நன்றி என்பதென்? வஞ்சித்த நாய்களின் நின்ற வஞ்சனை நீயும் நினைத்தியோ?” (14) போரில் இராமர் வில்லைத் தேவர் மெச்ச, என்னை விரும்பிய அரக்கனின் கண்களைக் காகம் உண்பதைக் கண்டு யான் ஆறுதல் பெற வேண்டும். (15) இராமர் வில்லால் அரக்கியரின் மூக்கும் நாண் கயிறும் (தாலியும்) அறுபட்டாலேயே நான் நாணம் உடையவள் ஆவேன். (16)