பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 இலங்கை எலும்பு மலையாகாவிடின், என் இல் பிறப்பும் ஒழுக்கமும் கற்பும் பிறர்க்கு எங்ங்ணம் காட்டுவேன். - (17) இலங்கையை மட்டுமா? உலகம் முழுவதையுமே என் சொல் வன்மையால் சுடுவேன். அது இராமரின் வில் வன்மைக்கு மாசு என்று விட்டுள்ளேன். (1.8 மற்றும் ஒன்று கேள்! இராமரின் திருமேனியைத் தவிர, நீ ஐம்பொறி அடக்கியவன் எனினும், ஆணாகிய உன் உடலை யான் தீண்டலாமா? வேறும் உண்டுரை கேளது மெயம்மையோய் ஏறு சேவகன் மேனியல்லால் இடை ஆறும் ஐம்பொறி நின்னையும் ஆண்எனக் கூறும் இவ்வுருத் தீண்டுதல் கூடுமோ? (19) என்னைத் தீண்டினால் மாள் வான் ஆலிதன் என்னைத் தொடாமல் குடிலோடு தோண்டிக் கொண்டு வந்தான் இராவணன். (20) விருப்பம் இல்லாத பெண்டிரின் உடலைத் தீய எண்ணத்துடன் தீண்டினால் இராவணன் தலைவெடித்து விடும் என நான் முகன் இட்ட கெடுமொழி (சாபம்) உள்ளதால் யான் உயிர் பிழைத்திருக்க முடிகிறது. (21). இப்படியொரு சாபம் உண்டு என்பதை, வீடணன் மகளாகிய திரிசடை எனக்குக் கூறியதால், யான் அச்சமும் நடுக்கமும் இன்றி உள்ளேன். (22) அச்சாபம் இன்றெனில் யான் செத்திருப்பேன் அல்லவா? அறம் வழுவாதாதலின் இந்நிலை உள்ளது. மற்றும் என் கணவனின் வலிமையை நம்பியும், எனது கற்பின் தூய்மையைக் காட்டவும் இவ்வளவு நாளாய் உயிருடன் இருந்து வருகிறேன்.