பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 இராவணன் வினா: கேட்ட இராவணன், யான் செய்வதற்குப் பதிலாக இராமன் அம்பு வாலியைக் கொன்றது சரி. அந்த இராமன் இப்போது யாண்டுளான். அவன் மனைவியை அங்கதன் தேட வேண்டிய பொறுப்பை ஏற்றதன் காரணம் என்ன? என்று கேட்டான். அதற்கு அனுமன் கூறும் பதிலாவது: அனுமன் விடை : மனைவியைத் தேடி வந்த இராமனோடு, எங்கள் தலைவனாகிய சுக்கிரீவன், ஈருடல்-ஓர் உயிராக நட்பு பூண்டு, வாலியால் தனக்கு நேர்ந்த துன்பத்தைத் துடைக்க வேண்டினான். உடனே இராமன், வாலியைக் கொல்லும் முன்பே, சுக்கிரீவனுக்கு வாலி கவர்ந்து வைத்திருந்த அவன் (சுக்கிரீவன்) மனைவியாகிய உருமை என்பாளோடு அரசைத் தந்து விட்டதாகக் கூறிப் பின்னர் வாலியைக் கொன்றான். § "தேவியை நாடி வந்த செங்கணாற்கு எங்கள் கோமான் ஆவி ஒன்றாக நாட்டான், அருந்துயர் துடைத்தி என்ன, ஒவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன் உருமை யோடும் கோ இயல் செல்வம் முன்னே கொடுத்து வாலியையும் கொன்றான்” (81) பின்னர் நான்கு திங்கள் காலம் கழிய, போய்ச் சீதையைத் தேடி வருக என எம் தலைவன் கட்டளை யிட்டான்; அதன்படி வந்துளேன்; நடந்தது இது என்று அனுமன் சொன்னான். மீண்டும் இராவணன் கூறுகிறான்: இராவணன் கூற்று: உங்கள் குலத் தலைவனாகிய வாலியைக் கொன்றவ னுடன் நீங்கள் நட்பு கொண்டு அவனுக்கு ஏவல் செய்வதா?