பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 உமது புகழ் என்னாவது? இது தக்கதென்றால், இவ்வுலகம் மடமை உடையது என்றே கூற வேண்டும். அண்ணனைக் கொல்லச் செய்து அவனோடு நட்புக் கொண்டவன் அனுப்பிய நீ எங்கட்குச் சொல்வது யாது? ஏன் இங்குப் போர் புரிந்தாய்? உன்னைக் கொல்ல மாட் டோம்-அஞ்சாது கூறுக.என்று இராவணன் வினவினான். 'உங்குலத் தலைவன் தன்னோடு ஒப்பிலா உணர்ச்சி யோனை வெங்கொலை அம்பின் கொன்றாற்கு ஆள் தொழில் மேற்கொண்டிரேல் எங்கு உலப்புறும் நும் சீர்த்தி; நும்மொடும் இயைந்த தென்றால் மங்குலின் பொலிந்த ஞாலம் மாதுமை உடைத்து மாதோ !” (83) 'தம்முனைக் கொல்வித்து அன்னாற் கொன்றவற்கு அன்பு சான்ற உம்மினத் தலைவன் ஏவ,யாது எமக்கு உரைக்க லுற்றது? எம்முனைத் தூது வந்தாய்! இகல்புரி தன்மை என்னை? நும்மினைக் கொல்லாம்; நெஞ்சம் அஞ்சலை நுவல் தி என்றான்' (84) இவ்வாறு கூறிய இராவணனுக்கு, அனுமன், சீதையை விட்டு விடுமாறு நயமாகப் பல அறிவுரைகள் கூறித் திருத்த முயன்றான். இராவணன் வினா : கேட்ட இராவணன், அனுமனை நோக்கி, ஒரு குரங்கா எனக்கு அறிவுரை வழங்குவது? சரி, எல்லாம்.