பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சிலம்பு விற்கப் புறப்பட்ட பின்பு, அடைக்கலம் தந்த மாதரி என்பாள் தம் மகள் ஐயையிடம் காணும் நிமித்தங்களைக் கூறினாளாம்: குடத்தில் உள்ள பால் புரை குத்தியும் உறைந்து கட்டியான தயிராகத் தோயவில்லை; எருதின் கண்களில் நீர் வடிகிறது; ஏதோ நடக்க இருக்கிறது. உறி வெண்ணெய் உருகவில்லை: ஆடுகள் துள்ளியாடவில்லை; ஏதோ நிகழ உள்ளது. ஆன் (பசு) நிரை நடுங்கி வருந்தும்; கழுத்தில் கட்டியுள்ள மணிகள் அறுந்து விழுகின்றது; ஏதோ தீயது விளையப் போகிறது என்று கூறினாளாம். பாடல்பகுதி வருமாறு : சிலப்பதிகாரம் - ஆய்ச்சியர் குரவை -உரைப் பாட்டு மடை 1. 'குடப்பால் உறையா குவிசிமில் ஏற்றின் மடக்கணிர் சோரும் வருவதொன் றுண்டு. 2. உறிநறு வெண்ணெய் உருகா உருகும் மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு. 3. நான்முலை ஆயம் நடுங்குபு நின்றிரங்கும் - மான்மணி வீழும் வருவதொன் றுண்டு.' என்பது பாடல் கோவலன் புறப்பட்ட போதுகூட, அவனை முட்டுகிறாற்போல் ஒரு காளை எதிரேறி வந்ததாம்; இதன் பயனை அறியும் ஆயர் குலத்தினன் அல்லன் அவன்-வணிகர் குலத்தினன் ஆதலின் இதைப் பொருட் படுத்தாமல் சென்றானாம். கொலை க் களக்காதை: 'பல்லான் கோவலர் இல்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற் செல்வோன் இமிலேறு எதிர்ந்தது இழுக்கென அறியான் தன்குலம் அறியும் தகுதியன் றாதலின், (98–101)