பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 மாதிரியான கனவைத் தொடர்ந்து காண்பாள் என்பது உறுதியில்லை. இருப்பினும், நல்ல கனவாயிருப்பதால், இன்னும் தூங்கி இன்னும் கனவு காண்-என்று சீதை கை கூப்பி வேண்டிக் கொண்டதாகக் கம்பர் பாடியிருப்பது. மிகவும் சுவை பயக்கின்றதன்றோ? உலகியலில் நிமித்தத்திற்கும் கனாவுக்கும் ஏதாவது ஒரு பொருள் வடிவம் தருவது மக்கள் இயல்பு, அதைக் காப்பியங்களிலும் அமைத்துக்காட்டுவது ஒரு வகைக் காப்பியச் சுவையாகும். சிலப்பதிகாரத்தில் கனாத்திறம். உரைத்த காதை’ என ஒரு காதையே உள்ளது. தீக்குறி பற்றிக் கம்பர் இன்னும் ஒரு பாடலில் கூறி யுள்ளார். அக்ககுமாரன் அனுமனுடன் போர் புரிய வந்த போது, குதிரைகள் கீழே வீழ்ந்தனவாம்; அரக்கர்களின் இடத்தோளும் இடக்கண்ணும் துடித்தனவாம்; முகில் குருதிமழை பொழிந்ததாம்; இரவிலே காகங்கள் கரைந்தன வாம்; முகில் இல்லாமலேயே வானம் இடி இடித்ததாம். இவையாவும் அரக்கர்கட்குத் தீய நிமித்தங்களாகும்: "ஓங்கிருந் தடந்தேர் பூண்ட உளைவயப் புரவி ஓங்கித் தூங்கின வீழ, தோளும் கண்களும் இடத்துத்துள்ள, வீங்கின மேகம் எங்கும் குருதி நீர்த் துள்ளி வீழ்ப்ப, ஏங்கின காகம் ஆர்பப, இருளில் விண் இடிப்ப மாதோ: (அக்ககுமாரன் வதைப் படலம்-16): இத்தகைய நிமித்தங்களிலும் கனாக்களிலும் அந்தக் காலத்தில் மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.