பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. அழுகைச்(அவலச்)சுவை சுவைகள் வடமொழியில் நவரசம் என ஒன்பதாகக் கூறப்படுகின்றன. இவற்றுள் சாந்தம் அல்லது நடுநிலை என்பதும் ஒன்று. இது எல்லோராலும் பின்பற்றப் படாதாத லானும் அவ்வளவாகச் சுவைத்தல் நிகழாதாதலானும், தொல்காப்பியர் இதனை நீக்கிச் சுவைகள் எட்டு என்றார். தொல்காப்பியத்தில் சுவைகள் மெய்ப்பாடுகள் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் கூறியுள்ள எட்டு மெய்ப்பாட்டுச் சுவைகளாவன. "நகையே, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப' (தொல்காப்பியம்- பொருளதிகாரம் -மெய்ப்பாட்டியல்-3) என்பது தொல்காப்பிய நூற்பா. இவற்றுள் அழுகை என்ப தும் ஒன்று. 'அழுகையை அவலம் என்னும் சொல்லாலும் குறிப்பிடுவ துண்டு.