பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 பெண்கள் சிலர் இறந்து கிடக்கும் தம் கணவன்மாரின் எதிர் சென்று அடியில் விழுந்து வணங்கி அழுதனர். 'கதிர் எழுந்தனைய செந்திருமுகக் கணவன்மார் எதிர் எழுந்து அடிவிழுந்து அழுது சோர் இளநலார்" (43) மடந்தையர் சிலர் இறந்து கிடக்கும் கணவன் மேல் விழுந்தனர்; அவ்வளவு தான்! மீண்டும் கண் இமைத்திலர்; உடல் இரண்டாயிருக்க உயிர் ஒன்றாயினர். அதாவது: கணவன் உயிர்போன இடத்திற்கே இவர் தம் உயிரும் போனதாகக் கம்பர் கூறுகிறார் : 'தா இல் வெஞ்செரு நிலத்திடை உலந்தவர் தம்மேல் ஒவியம் புரைநலார் விழுதொறும் சிலர் உயிர்த்து ஏவு கண்களும் இமைத்திலர்களாம்; இதுஎலாம் ஆவி ஒன்று உடல் இரண்டு ஆயதே கொலாம்! வேறு பெண்டிர் சிலர், கணவர் சென்றுள்ள துறக்க (சொர்க்க) உலகிற்குத் தாமும் சென்று கணவரோடு கூடு வதும் ஊடுவதும் செய்தனராம் : 'ஓடினார் உயிர்கள் நாடு உடல்கள் போல்: உறுதியால் வீடினார்; வீடினார் மிடைஉடல் குவைகள் வாய் நாடினார் மடநலார்: நவை இலா நண்பரைக் கூடினார் ஊடினார் உம்பர்வாழ் கொம்பு அனார்.' (45