பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209 இந்தப் பாடலில் கம்பர் செய்துள்ள கற்பனை நன்றா யுள்ளது. கணவர் உடல் கிடக்கும் இடத்திற்கு , உயிரைத் தேடும் உடல் போல ஒடினராம். அப்படியென்றால் உயிர் அற்ற கணவர் உயிராகவும், உயிருள்ள மனைவியர் உயிர் அற்ற உடலாகவும் கற்பனை செய்யப்பட்டுள்ளது அன்றோ? பிணக் குவியலில் கணவரைத் தேடிக் கண்டு பிடித்தனராம். இங்கே கணவர் நண்பராகக் கூறப் பட்டிருப்பது ஒரு புதுமை. இந்த அமைப்பு நட்பின் ஒரு வகை இலக்கணமாகும். ஓர் அரக்கனின் தலையற்ற முண்டம் ஒன்று நின்றபடி ஆடிக்கொண்டிருந்தது. அதைக் கண்ட பெண் ஒருத்தி, அக் குறையுடலை நோக்கி, உன் நண்பரும் என் கணவரும் ஆகியவர் எங்கு உள்ளார் என்று எனக்குக் காட்டுவாயா என்று கைகூப்பி வணங்கி அழுதபடியே வினவினாளாம்: "தீட்டு வாள் அனைய கண்தெரிவை ஒர்திரு அனாள் ஆட்டில் நின்று அயர்வதோர் அறுதலைக் குறையினைக் கூட்டி, நின் ஆருயிர்த் துணைவன் எம்கோனை நீ காட்டுவா யாதி என்று அழுது கை கூம்பினாள்' (46) ஆடும் குறையுடல் அயரும் நிலையில் இருந்ததாம். அந்த உடலோடு தலையைக் கூட்டிச் சேர்த்து வைத்துத் தம் கணவரைக் காட்டும்படி வினவினாளாம். இங்கே நண்பன் 'ஆருயிர் துணைவன்’ என்பதும் நட்புக்கோர் இலக்கணம். மற்றொருத்தி கணவரது வெட்டுண்ட தலையைக் கையில் ஏந்தியபடி ஆடிக் கொண்டிருக்கும் குறையுடலை நோக்கி, என் அரசே! நீ நடனம் ஆடி ஆடி அலுத்துப் போய் விட்டாய்; இன்னும் ஆடினால் உடல் நோகும், நடனம் ஆடுவதை நிறுத்திக் கொள்வாயாக என்று வேண்டி,