பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 இங்கே இந்திரசித்தைக் கம்பர் 'கறுப்புண்ட மனத்தன்' எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது சினம் கொண்ட உள்ளத்தனாம் அவன். சினத்தை -வெகுளியைக் கறுப்பாகக் கூறுவது மரபு. தொல்காப்பியம்-சொல்லதி: காரம்-உரியியலில் உள்ள, 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள்” (76) என்னும் நூற்பா காண்க. இந்திரசித்து, கையில் இருந்த வில் கீழே நழுவி விழ, கண்களிலிருந்து நீரும் குருதியும் சொரிந்து, அதாவது இரத்தக் கண்ணிர் சிந்தி, மூக்கி லிருந்து மூச்சு என்னும் பெயரில் நெருப்பைக் கக்கினா 6öf II LD: தேர் உகக் கையின் வீரச்சிலை உக வயிரச் செங்கண் நீர் உகக் குருதி சிந்த, நெருப்பு உக உயிர்த்து நின்றான்” (20) என்பது பாடல். செங்கண் நீர் உகக் கருதி சிந்த' என்பது, இரத்தக் கண்ணிர் என்னு கற்பனையைக் காட்டுகிறது, மேலும் இந்திரசித்து, தம்பியை எண்ணிக் கூறுகிறான்; உன் (நம்) தந்தைக்கு அஞ்சி எமனும் உயிர் பறிக்க வாரான்; எவ்வுலகத்து உள்ளவரும் அஞ்சுவர்; அங்ங்னம் இருக்க, இவ்வளவு எளிதில் எங்களை யெல்லாம் விட்டு நீங்கி நீ எவ்வுலகத்தை அடைந்தாய் என்று வினவுகி. றா ன. "வெவ்விலை அயில்வேல் உந்தை வெம்மையைக் கருதி ஆவி வவ்வுதல் கூற்றும் ஆற்றான்; மாறு மாறு உலகின் வாழ்வார் அவ்வுலகத்து உளாரும் அஞ்சுவர் ஒளிக்க ஐயா! எவ்வுல கத்தை உற்றாய் எம்மை நீத்து எளிதின் எந்தாய்?" (21),