பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215 "பஞ்ச ரத்தொரு பசு நிறக் கிளி வெந்து பதைப்ப, அஞ்சனக் கண்ணின் அருவிநீர் முலை முன்றில் அலைப்ப குஞ்சரத் தனகொழுநரைத் தழுவுறும் கொதிப்பால் மஞ்சிடைப் புகும் மின்எனப் புகையிடை மறைந்தார்-’’ (இலங்கை எரியூட்டுப் படலம்-21) 'கரையில் நுண்புகைப் படலையில் கரந்தனர் கலிங்கத் திரையினுள் பொலி சித்திரப் பாவையின் செயலார்' (22) அரக்கியர் சிலர், ஒரு குழந்தையை இடுப்பில் சுமந்து கொண்டும் மற்றொரு குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டும், வேறொரு குழந்தை பின்னே அழுது கொண்டு வரவும், கூந்தல் சிதற, நெருப்புக்கு அஞ்சிக் கடலில் வீழ்ந்தனராம், 'மருங்கின்மேல் ஒருமகவு கொண்டு, ஒருதனி மகவை அருங்கையால் பற்றி, மற்றொரு மகவு பின் அரற்ற, நெருங்கி நீண்டிடு நெறிகுழல் கறுக்கொள நீங்கிக் கருங்கடல் தலை வீழ்ந்தனர், அரக்கியர் கதறி” (28) இவ்வாறாக அழுகைச் சுவை உள்ளத்தை உருக்கும் அளவில் சுந்தர காண்டப் பகுதியில் அமைந்துள்ளது. உற்றாரை இழந்தவர்கள் செய்த செயல்களெல்லாம் மெய்ப்பாடாகும். குறிப்பாக, மெய்ப்பாட்டின் கூறாகிய இத்தகு செயல்களைத் தமிழில் விறல்’ எனவும், வடமொழி கயில் சத்துவம்’ எனவும் கூறுவர். -