பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 10. "கீண்டது வேலை நன்னீர் கீழ்உறக் கிடந்த நாகர் வேண்டிய உலகம் எல்லாம் வெளிப்பட மணிகள் மின்ன ஆண்டகை அதனை நோக்கி அரவினுக் கரசன் வாழ்வும் காண்டகு தவத்தென் ஆனேன் யான் எனக் கருத்துள் கொண்டான்' (20) இவ்வாறாக மயேந்திர மலையைப் பற்றிய கற்பனை கள் எழுந்ததின் நோக்கம் என்ன? முன்னர்க் காட்டப் ப்ட்டுள்ள அக நானூற்றுப் பாடலில், கோடையும் குளமும் கபிலரால் கற்பனை செய்யப்பட்டிருப்பதின் நோக்கம், மழையின் மிகுதியை அறிவிப்பதேயாம் அதுபோலவே, கீழே ஊன்றி எழும்பித் தாவிய அனுமனின் பேராற்றலைப் பெரிதுபடுத்திக் காட்டும் நோக்கமே, மயேந்திர மலை யினால் ஏற்பட்ட மாற்றத்தைக் கம்பர் கற்பனை செய் திருப்பதாகும். கபிலர் கீழ் இருந்தவாறே கற்பனை செய்துள்ளார். கம்பரோ, அனுமனைப் போலவே மேலே தாவி எழுந்து கற்பனை செய்துள்ளார். தாவும் அனுமனின் தோற்றத்தைப் பற்றியும் கம்பர் கற்பனை செய்துள்ளார் மேரு மலையிலிருந்து மூன்று உச்சிக் குவடுகள் பிரிந்து வந்த போல் தோன்றினானாம். 'முடுக்குறக் கடலில் செல்லும் முத்தலைக் கிரியும் ஒத்தான்'- (23) ஒற்றை மலர் வான ஊர்தி (புட்பக விமானம்) மேல் செல்வது போல் தோன்றினான். (இந்தக் காலம் எனின், மேலே ஃஎலிகாப்டர் போவது போல் போனான் என்பார் களோ?) 'ஒற்றைப் புட்பக விமானம்தான் அவ்விலங்கைமேல் போவது ஒத்தான்' (24)