பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 படிக்காத மக்களே- எழுதத் தெரியாத மக்களே உவமையைக் கையாளும்போது படித்த பாவலர்கள்எழுத்தாளர்கள் உவமையைக் கையாளாமல் விடுவார்களா என்ன? எமுத்துப் படைப்பின் இன்றியமையாத ஒர் உறுப்பு உவமையாகும். கவிஞர்கள் உவமையைக் கையாளு வதில் தங்கள் கைவரிசைகளையெல்லாம் காட்டுவார்கள். எவ்வளவுக்கெவ்வளவு மிகுதியாக உவமையை ஒருவர் கையாளுகிறாரோ- அவ்வளவுக்கவ்வளவு அவரை உயர்ந்த கவிஞராக எடை போடுவோரும் உளர். உவமைக் கவிஞர்' என்ற பட்டம் சூட்டுவதும் உண்டு. இந்தக் கலையில் கம்பரும் இளைத்தவரோ-சளைத் தவரோ- அல்லர். எங்கெங்கே எவ்வளவு உவமைஉருவகங்களைக் கையாள முடியுமோ அவ்வளவையும் கையாண்டு தள்ளி விட்டார் இந்த அடிப்படையுடன் கம்பர் சுந்தர காண்டத்தில் படைத்துக் காட்டியுள்ள உவமைஉருவகங்கட்குள் புகுவோமாக: அனுமன் அங்கதாாை என்னும் அரக்கியின் வயிற்றைக் கிழித்து அவளது குடலோடு விண்ணில் சென்ற காட்சி, பாம்பைப் பிடித்துக் கொண்டு பறக்கும் கருடன் போலவும், காகித வாலோடு பறக்கும் காற்றாடியைப் போலவும் இருந்த தாம். பாடல் பகுதிகள்: (கடல் தாவு படலம்) 'உள்வாழ் அரக் கொடு எழு திண் கலுழன் ஒத்தான் (71) 'வாலோடு ஆகாயம் உற்ற கதலிக்கு உவமை. ஆனான்: (72 (அர = பாம்பு, கலுழன் = கருடன், கதலி = காற்றாடி) ஊர் தேடு படலத்தில், நிலவின் தோற்றத்திற்குச் சில உவமைகள் தந்துள்ளார் கம்பர். சு-14