பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 $ அறம் தோன்றியது போலவும், சுந்தரி முகம் போலவும், இந்திரனது வெண் கொற்றக் குடை போலவும் திங்கள் தோன்றியதாம். வானம் திங்களாகிய வெள்ளைக் குடத்தினால் பாற் கடல் நீரை முகந்து கொட்டினாற்போலத் திங்களின் ஒளி பரந்து தோன்றியதாம். பாடல்: தெரிந்து ஒளிர் திங்கள் வெண் குடத்தினால் திரை முரிந்து உயர் பாற்கடல் முகந்து மூரி வான் சொரிந்ததே ஆம் எனத் துள்ளும் மீனொடும் விரிந்தது வெண்ணிலா மேலும் கீழுமே” (53) இது பாடல். மேலும், திங்களாகிய ஆவின் பால் மடியி லிருந்து பால் சொரிவது போலவும் நிலவு ஒளி வீசிற்றாம். மறறும் இலங்கை முழுவதும் வீசிய நிலவின் ஒளி, அந் நகர்க்கு வெள்ளைத் துணி உறை போர்த்தது போலவும் காணப்பட்டதாம். புகழை வெண்ணிறமானது என்று கூறும் மரபு உண்டு என்னும் கருத்து, இக்கட்டுரைநூலில் வேறோர் இடத்திலும் கூறப்பட்டுள்ளது. இங்கே நிலவின் வெள் ஒளி இராமனது புகழ் புகுந்து உலாவியது போல் இருந்ததாம். 'அன்னவன் புகழ் புகுந்து உலாயது ஓர் பொலிவும் போன்றதே' (65) அனுமன் மேல் தேவர் பொழிந்த மலர்கள், மண்ணில் விழாமல், அரக்கனுக்கு அஞ்சி விண்ணிலேயே இருந்தாற் போல் விண்மீன்கள் தோன்றின. பாடல்: 'எண்ணுடை அனுமன்மேல் இழிந்த பூமழை மண்ணிடை வீழ்கில மறித்தும் போகில அண்ணல் வாள் அரக்கனை அஞ்சி ஆய்கதிர் விண்ணிடைத் தொத்தின போன்ற மீன் எலாம்' (55)