பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 அனுமன் இலங்கைக்குள் ஒவ்வோர் இடத்தையும் கடந்து செல்லுதலுக்கு, பூக்கள் தோறும்வண்டு தாவிச் செல்லுதலை ஒப்புமையாக்கியுள்ளார் கம்பர். இது பாடல். 'ஆத்துறு சால்ை தோறும் ஆணையின் கூடம் தோறும் மாத்துறு மாடம் தோறும் வாசியின் பந்தி தோறும் காத்துறு சோலை தோறும், கருங்கடல் கடந்ததாளான் பூத்தொறும் வாவிச் செல்லும் பொறிவரி வண்டின் போனான்' (99) கும்பகருணன் மந்திரத்தால் கட்டுண்ட நாகம் போல இடையீடின்றித் தொடர்ந்து தூங்கினான்; உலகம் அழியும் ஊழிக்காலம் வரும் வரையும் பொங்காமல் நீண்ட கால மாய்க் கடல் காத்திருத்தல் போல் நீண்ட நாளாய்த் தொடர்ந்து தூங்கினான் அவன். - "தடைபுகு மந்திரம் தகைந்த நாகம் போல் இடைபுகல் அரியதோர் உறக்கம் எய்தினான்; கடையுக முடிவெனும் காலம் பார்த்து அயல் புடை பெயரா நெடுங் கடலும் போலவே' (127) மிகச் சிறிய அணுவிலும் மிகப் பெரிய மேருமலையிலும் ஒளி வீசிச் செல்லும் ஞாயிறு போல, அனுமன் மிகச் சிறிய பொருள்களையும் மிகப் பெரிய பொருள்களையும் கடந்து சென்றான். "நுணுகும் விங்கும், மற்று அவன் நிலை யாவரே நுவல்வார் அணுவில் மேருவில் ஆழியான் எனச் செலும் அனுமன்' (132) அரக்கியர்கள் அந்தி வானம் போன்றிருந்தனராம். மேனி வானம் - மணி மாலை விண்மீன்கள் - இடுப்பு