பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 மின்னல்-செந்நிற ஒளிக்கற்றை கூந்தல்-கருமேகம் கண்பிறைநிலா நெற்றி-இவ்வாறாகக் கம்பர் உருவகம் செய்து, அரக்கியர் அந்திவானம் போன்றனர் என்கிறார்; 'சவிபடு தகைசால் வானம் தான் ஒரு மேனி ஆக, குவியும் மீன் ஆரமாக, மின் கொடி மருங்குல் ஆக, கவிர்ஒளிச் செக்கர்,கற்றை ஒதியா, மழை உண் கண்ணா. அவிர் மதி நெற்றி ஆக, அந்திவான் ஒக்கின்றாரும்' . (180). என்பது பாடல். அசோகவனத்தில் சீதை மெலிந்து வருந்தி யிருந்ததற்குச் சில ஒப்புமைகள் காட்சிப் படலத்தில் கம்பரால் தரப்பட்டுள்ளன. மலைக்கற்களுக்கு நடுவே ஒரு துளி நீரும் காணாது. மெலியும் மருந்துச் செடிபோல் சீதை மெலிந்திருந்தாள். அவளது இடையைப் போலவே மற்ற உறுப்புகளும், மெலிந்து விட்டன: 'வன் மருங்குல் வாள் அரக்கியர் நெருக்க அங்கிருந்தாள் கல்மருங்கு எழுந்து என்றும் ஒர் துளிவரக் காணா நன்மருந்து போல்நலன் அற உணங்கிய நங்கை மென்மருங்குல் போல் வேறுள அங்கமும் மெலிந்தாள்' s (3). அரக்கியர் நடுவண் அகப்பட்டுக் கொண்ட சீதை தூக்கம் இன்றி வெயி லுக்கு முன் ஒளி தெரியாத விளக்கு. போல உடலில் விளக்கம் இன்றி, புலிக் கூட்டத்திடையே. அகப்பட்ட இளைய பெடை மான் போன்றவளானாள் : 'துயிலெனக் கண்கள் இமைத்தலும் முகிழ்த்தலும் துறந்தாள்; வெயிலிடைத் தந்த விளக்கென ஒளி இலா மெய்யாள்;