பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221 மயில் இயல் குயில் மழலையாள் மான் இளம் பேடை அயில் எயிற்று வெம்புலிக் கழாத்து அகப்பட்ட தன்னாள்' (4) அமிழ்தத்தைக் கொண்டு மன்மதன் தீட்டிய ஓவியம் புகை படிந்து பொலிவிழந்தாற்போல் சீதை தெளிவு இன்றிக் காணப்பட்டாள். ‘'தேவு தெண்கடல் அமிழ்து கொண்டு அனங்க வேள் செய்த ஒவியம் புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள்' (11) முகில் (மேகக்) கூட்டத்திடையே தோன்றும் மின்னல் போல, அரக்கியர் நடுவே உள்ள சீதையை அனுமன் <56&7 ss 60s. 'விரி மழைக் குலம் கிழித்து ஒளிரும் மின் என கரு நிறத்து அரக்கியர் குழுவில் கண்டனன்' (59) சீதையை இழந்த இராமன், உயிர் இன்றி இயங்கும் இயந்திர வடிவம் போன்று இருப்பதாக அனுமன் சீதை யிடம் தெரிவித்தான். 'இன் உயிர் இன்றி ஏகும் இயந்திரப் படிவம் ஒப்பான்' (78) அனுமன் சீதைக்குப் பேருருவம் (விசுவரூபம்) காட்டிய போது, மேரு மலையில் உள்ள மரங்களில் மின்மினிக் கூட்டம் தொத்திக் கொண்டிப்பதைப்போல, அனு மனது உடலில் உள்ள மயிர்களில் விண்மீன்கள் தொத்திக் கொண்டது போல் காணப்பட்டனவாம். 'ஒத்துயர் கனகவான் கிரியின் ஓங்கிய மெய்த்துறு மரம்தொறும் மின் மினிக் குலம். மொய்த்து உளவாம் என, முன்னும் பின்னரும் தொத்தின தாரகை மயிரின் சுற்று எலாம்' (101)