பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 திரைக்கும் மாசுணம் வாசுகி ஒத்தது; தேவர் அரக்கர் ஒத்தனர்; மந்தரம் ஒத்தனன் அனுமன்: (60) உலகம் அழியும் ஊழிக்காலத்தில் ஆதிசேடன் சுற்றிக் கொள்ளும் மேருமலையைப் போல் தோன்றினான் அனுமன். "மறத்து மாருதம் பொருத நாள் வாள் அரா அரசு புறத்துச் சுற்றிய மேருமால் வரையையும் போன்றான்' (6.1) வேடன் கையில் குஞ்சு அகப்படத் தாய் அன்னம் வருந்துதல் போல, அரக்கரிடம் அனுமன் அகப்பட்டுக் கொண்டதற்குச் சீதை வருந்தினாள்: 'பாவி வேடன் கைப் பார்ப்புஉறப் பேதுறும் தூவி அன்னம் அன்னாள் இவை சொல்லினாள்? (பிணிiட்டுப் படலம்-30) மற்றும்; கன்று பிறர் கையில் அகப்படத் தாய் விலங்கு வருந்துதல் போலவும் சீதை வருந்தினாள்: 'தேய கன்று பிடியுறத் தீங்கு உறும் தாயைப் போலத் தளர்ந்து மயங்கினாள்' (35) இராவணன் அரசவையில் வீற்றிருந்த போது, அவன் முடிக்கு மேல் இருந்த வெண் கொற்றக் கொடை, ஒரு புதுத் திங்கள் தோன்றியிருப்பது போல் காணப்பட்ட தாம்: 'தலங்கள் மூன்றிற்கும் பிறிதொருமதி தழைத்தென்ன அலங்கல் வெண்குடைத் தண்ணிழல் அவிர் ஒளி பரப்ப' (37)