பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கடல் பொன்னிறமான மேரு மலையை முடியாகச் சூடிக்கொண்டால் எப்படியோ-அப்படி கரிய இராவணன் பன்மணி பதித்த முடியொடு விளங்கினான். 'குவித்த பல்மணிக் குப்பைகள் கலையொடும் கொழிப்பச் சவிச் சுடர்க்கலன் அணிந்த பொன்தோளொடு தயங்கப் புவித்தடம் படர்மேருவைப் பொன் முடி என்னக் கவித்து மால் இருங்கடல் இருந்தது கடுப்ப' (41) இருண்ட இரவு என்பவள், முத்தால் ஆன அணிகலன் களாகிய நிலாவொடும் விண்மீன்களாகிய பன்மணிக ளொடும் பொருந்தி அந்தி வானமாகிய உடையை உடுத்துக்கொண்டிருப்பது போல் கரிய இராவிணன் காணப் பட்டானாம்! இங்கே இரவு ஒரு பெண்ணாக உருவகிக்கப் பட்டுள்ளது. "சிந்து ராகத்தின் செறிதுகில் கச்சொடு செறியப் பந்தி வெண்முத்தின் அணிகலன் முழுநிலாபரப்ப இந்து வெண்குடை நீழலில் தாரகை இனம்பூண்டு அந்திவான் உடுத்து அல்லுவிற் றிருந்ததாம் என்ன? (42) சோலையில் தேன் அருந்தத் துடிக்கும் வண்டுபோல, இராவணன் சீதையை அடைய மனங்கொண்டானாம். 'பொதும்பர் வைகுதேன் புக்கு அருந்துதற்கு அகம்புலரும் மதம்பெய் வண்டெனச் சனகிமேல் மனம் செல' (47) இராவணன் தன்னை வணங்கும் மகளிரின் முகங் களாகிய மலரும் தாமரை மலர்கட்கு ஞாயிறாகவும், தன்னை வணங்கும் வானவர்-தானவர்களின் கைகளாகிய தாமரை மலர்கள் குவிவதற்குத்திங்களாகவும் இருந்தானாம். இஃது ஒரு வகை உருவகமாகும்.