பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227 இராவணன் வரும்போது வெண்சாமரை வீசப்பட்டது;. மேலே வெண்கொற்றக் குடை பிடிக்கப்பட்டது. இவற்றிற் குக் கம்பர் உவமை கூறுகிறார்: வெள்ளைப்பால் கடலின் அலை, கரிய மலை மேல் மோதி மோதித் திரும்புவது. போல், கரிய இராவணன் முன்பு வெண் சாமரை வீசப் பட்டதாம்; கருங்கடலினின்றும் மேல் எழும் கறையற்ற வெள்ளைத் திங்கள் போல் வெண்கொற்றக்குடை விளங்கிற். றாம: 'பாலின் வெண்பரவைத் திரை கருங்கிரிமேல் பரந்தெனச் சாமரை பதைப்ப, . வேலைநின் றுயரும் முயல் இவ் வெண்மதியின் வெண்குடை மீதுற விளங்க” (89), திங்களின் நடுவில் முயல் (கறை) இருக்கும். இங்கே முயல் இல்லாத வெண்மதி என்று கூறியிருப்பது இல் பொருள் உவமை'யாகும். இராவணன் சீதையை நெருங்கிய போது, அவள், புலி தன்னைத் தின்ன வந்தபோது கலைமான் நடுங்குவது. போல் நடுங்கினாள்: 'காய்சின உழுவை தின்னிய வந்த கலையிளம் பிணை எனக்கரைந்தாள்' (94). சீதையை அடைய விரும்பி வந்த இராவணன் அவளைப் பெற முடியாமல் திரும்பிப் போய் விட்டான். அப்போது சீதை, பாம்பு விழுங்கி உமிழ்ந்த (கிரகண காலத்) தூய மதியம் போன்றிருந்தாள்! 'போயினன் அரக்கன் பின்னை பொங்கு அரா நுங்கிக் கான்ற தூயவெண் மதியம் ஒத்த தோகை." (147). என்பது பாடல் பகுதி. 'யானைக்கும் அடி சறுக்கும்' என்பதற்கேற்ப கம்பர் இங்கே தவறி விட்டார்.