பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 இராவணன் சீதையைத் தீண்டவே இல்லை. அங்ங்னம் இருக்க, 'அரா நுங்கிக் கான்ற தூய வெண் மதியம் ஒத்த தோகை என்று கூறியிருக்கக் கூடாது. விழுங்கி உமிழ்தல் எனில், தொட்டு அணைத்திருப்பதாகப் பொருள் படுமே! ஆனால், கம்பர் தூய வெண் மதியம்' என்று கூறியிருப்ப தால் ஓரளவு தப்பித்துக் கொண்டார் என்று கூறலாம். கிரகண காலத்தில், அறிவியல் முறைப்படி, திங்களை எதுவும் தீண்டவில்லையன்றோ? அதுபோல், இராவணன் சீதையைத் திண்டவில்லை என நாம் ஆறுதல் பெறுவதைத் தவிர வேறு வழியில்லை. இராவணன் சீதையை விடுவிக்கவில்லையேல் அவனது இலங்கை எதிர்காலத்தில் உருகிவிடும் என்பதை விளக்கக் கம்பர் உருவக அணி அமைத்துள்ளார். அரக்கர்கள் ஊதும் உலையில் போடும் கரியாம்; சீதை நெருப்பாம்; இராமன் அம்பு, துருத்தியால் ஊதும் ஊதைக் காற்றாம்; இலங்கை பொன்ன்ாம். அதாவது இலங்கை எரிந்து உருகி விடுமாம். பாடல் இது: 'வினையுடை அருக்கராம் இருந்தை வெந்துகச் சனகி என்றொரு தழல் நடுவண் தங்கலான், அனகன் கை அம்பெனும் அளவில் ஊதையால் கனகம் நீடு இலங்கை நின்றுருகக் காண்டியால்' (சூடாமணிப் படலம்-59) ஒன்று உறுதி என்பதை விளக்க உள்ளங்கை நெல்லிக் கனிபோல’ என்னும் உவமையைப் பலரும் பயன் படுத்துவதுண்டு. கம்பருக்கும் இது விலக்கு அன்று. அனுமன் சீதையிடம், இராமர் இலங்கையை அழித்துச் சீதையை மீட்டல் உறுதி என்பதை விளக்கும்போது, இதனை உள்ளங்கை, நெல்லிக்கனி போல உண்மை யாவதைக் காட்டுவேன் எனக் கூறுகிறேன்: 'உன் கைந் நிலை நெல்லியங்கனியின் காட்டுகேன்' (70)